புதன், 20 ஏப்ரல், 2011

கண்ணாடி நிலா !


"உள்ளத்து உள்ளது கவிதை
இன்பம் உருவெடுப்பது கவிதை"

என்பர், கவிஞர்.


இயற்கையோடு இணைந்த வாழ்வு மகிழ்ச்சியான வாழ்க்கையையும்,
மனதிற்க்கு அமைதியையும் தரும்.


                 
                                                       கவிஞர்.ப. திருமால்.

அவ்வகையில், கவிஞர்.ப.திருமால்அவர்கள்தம்பல்வேறுஅகவையில்இயல்பாக 
அனுபவித்த பல்வேறு நிகழ்வுகளுக்கு தம் கவிதைகளில் உயிரூட்டியுள்ளார்.








அவை மட்டுமின்றி கவிஞனின் முக்கிய கருவான காதல், அழகு, நலன்,
 ஏமாற்றம், வலி,சிறப்பு, மகிழ்ச்சி, சமுதாய அவலங்கள் போன்றவற்றை
 தன் இயல்பான உணர்வுகள் மூலம் கவிதையாக்கியுள்ளார். 



சொக்க நாதரிடம் தூது சென்ற தமிழை பல்திறமாய் சிறப்பித்து இறுதியில்,

"எத்திக்கும் இருப்பவர்கள் எம் தமிழர்
எனவே தான் வேண்டுகின்றோம்
ஏற்றமிகு தமிழே, என்றும் நீ
செங்கோலைக் கைக்கொண்டு
செய்திடு நீ நல்லாட்சி"

என்று எத்திசையிலும் இருப்பவர்கள் அனைவரும் தமிழர்களே!
எனவே எம்மையும் எம் மண்ணையும் என்றும் நீயே ஆட்சிசெய்தல் வேண்டும்
 எனதுணிந்து தன் வேண்டுகோளை முதலிலே வைக்கிறார்.


இயற்கை கொடுத்துள்ள உயிரினங்கள் நமக்கு பாடம் கற்பிக்கும் நிகழ்வை,

"வயிற்றில் சுமந்த அம்மா
தோளில் சுமந்த அப்பா
மனதில் சுமந்த காதலி
இவர்களை 
நினைத்துபார்க்க வைத்தது
முதுகில் சுமந்து செல்லும்
நத்தை"

என காட்டி, இளைஞர்கள் மூப்படைந்த தம் பெற்றோர்களை தம் இறுதி காலம் வரை 
சிறந்து பேணிமுதியவர்களை தனியாக விடும் சமுதாய அவலத்தை போக்க வேண்டும் என்கிறார்.



அவரவர் தாகம் அவருக்குத்தான் தெரியும் என்பார்கள்.அதுபோல,

"தண்ணீர்க் குடத்துடன் பெண்கள்
கண் அடித்தன
தெரு விளக்குகள்"

என்று இயல்பாய் நிகழ்ந்த இரு வேறு நிகழ்வுகளை ஒன்றுகாட்டி, தண்ணீருக்காக
 காத்திருக்கும்பெண்களை பார்த்து தெருவிளக்குகள் கண் அடித்ததாக கூருகிறார் கவிஞர்.



தமிழர்களின் அக வாழ்க்கையில் தலைவி சிறந்த அழகு நலனுடன் சிறப்பிக்கப்படுவதை,

"மழைக்கால வானவில்
விற்பனைக்கு
சப்தமிடும்
வியபார சந்தையாய்
கடல் அலைகள்
வானத்தைத் தொட எண்ணி
வடக்கிருக்கும் இமயமலை
இவையெல்லாம்
அழகுதான்
என்னவள் வரும் வரைக்கும்"

எனும் வரிகளில் கூறி, வானவில்,கடல் அலை,இமயமலை இவையெல்லாம் அழகுதான் 
எனினும் தன் தலைவியின்வருகையால் அனைத்தும் மறைந்து போயின, என்று மயங்குகிறார்.



"சுற்றுச் சூழலை பதிக்காது
எரியாத நெருப்பு
பெண் தலையில் ரோசா"

எனும் கவிதை வழி பெருமூச்சு விட்டுக்கொள்கிறார்.




என்னதான் நவீனங்கள் பெருகினும் தன் தலைவி அன்பு செலுத்துதலில்
 பழைய மரபினையே பின்பற்றுதலை,


"நவீன
ஆயுதங்கள் வந்த போதும்
காதல் போரில்
விழி அம்புகளால் தாக்கும்
பழைய மரபை
மறந்திடாத பெண்களில்
நீயும் ஒருத்தி"

என்ற இவரின் வரிகள் நம் "பொய்யா மொழியின்"   'தான் நோக்குங்கால் நிலன் நோக்கும்' எனும் 
 வரிகளை நினைவுபடுத்துகின்றன.




"முத்து கொலுசுகள்
சேற்றில் மூழ்கின
நடவு நடும் பெண்கள்"

எனும் வழி நமக்காக சேற்றில் மூழ்கும் உழைக்கும் முத்துக்களை
அச்சேற்றியுள்ளார்.



அரசியல் எனும் சேற்றிலிருந்து இந்தியாவை வாங்க, காலனிடம் சென்ற மகாத்மாவை 
மீண்டும்வருமாறு கவிஞர்அழைக்கிறார்.

"கதர் ஆடை கட்டித்
தழுவிய உன் இடையை
காலன் தழுவினான்
மீண்டும் வா....
அரசியல் வாதிகளிடம்
 இந்தியா
அதையும் வாங்கலாம்"



கரு நிறத்தை வெறுப்பவர்க்கு தன் கவிதை மூலம் வினாத் தொடுக்கிறார் கவிஞர்.

"கருப்பு நிறம்
அசிங்கம் என்று
கருவிழியால் தானே
பார்த்துச் சொன்னாய்"



நூலின் இறுதியாய் கவிஞர்,

"கர்த்திகை தீபத்தைக்
கையிலேந்தி
மலைமீது நிற்கின்றேன்
தீபத்தைப் பார்த்தவர்கள்எவரும்
என்னைப் பார்க்கவில்லை
உன்னைத்தவிர"

எனும் கவிதையில் எவ்விடத்தில் இருந்தாலும், எந்த நிலையில்இருந்தாலும்,
தலைவியின் மனம் தலைவனையும்,தலைவனின் மனம் தலைவியையும் 
நாடியே செல்லும் என்பதை வெளிக்காட்டுகிறார்.



இவை போன்று பல கவிதைகளுடன் இடம் பிடித்துள்ள இந் நூல்
 தமிழ் பற்றாளர்கள் மற்றும் இளம்தலைமுறையினரின்,
மனதில் இடம் பிடிப்பது உறுதி.







கண்ணாடி நிலா,கிடைக்குமிடம்:

கவிஞர்.ப. திருமால்.
மின்வாரிய அலுவலகம் எதிரில்
செஞ்சி சாலை,
சேத்துப்பட்டு.
கைபேசி:9444895851
                                                                                                           அன்புடன்,

                                                                                                          அர.விவேகானந்தன்.
                                                                                                          கைபேசி:9944386162