ஞாயிறு, 7 ஜூன், 2015

முனைவர் கதிர்முருகுவின் தமிழ்ப்பணிகள்


தன்னலம் பாராமல் தொண்டாற்றும் தமிழ் மக்களால்தான் தமிழ்த் தாய் புதுமையடைகிறாள்.அத்தகைய தமிழ் மக்களில் குறிப்பிடத்தகுந்தவர் முனைவர்.கதிர்முருகு ஆவார்.

இவர் புதுக்கோட்டை மாவட்டம் வேகுப்பட்டி எனும் ஊரைச் சார்ந்தவர்.பெற்றோர்:கதிரேசன்மற்றும் மீனாள் ஆவர். இளமையில் ஏற்பட்ட வறுமை இவரை தமிழை சுவாசிக்கச் செய்தது. சுயதொழில் செய்துகொண்டே  முனைவர் பட்டம் வரை பயின்றார்.

பின்னர் பல்வேறு தனியார் கல்லூரிகளில் பணியாற்றிய இவர் அரசு ஆசிரியர் தேர்வில் வென்று தற்பொழுது முதுகலை தமிழாசிரியராக தொண்டாற்றி வருகிறார்.

இவருக்கு சசிரேகா என்ற மனவியும் சிவரஞ்சனி மற்றும் ஸ்ரீவர்ஷினி என்னும் இரு பெண்மணிகளும் உள்ளனர்.

அயராது தமிழுக்கு தொண்டாற்றிவரும் இவர்,வேரல் மொழி இலக்கிய ஆய்வு மையம் என்னும் அமைப்பின் மூலம்  மாதம்தோறும் கருத்தரங்களை  நடத்தி தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்திவருகிறார்.


இவரின் தமிழ்ப்பணிகளை வெளிக்கொணரும் வகையில்ஆர்.விவேகானந்தன்  அவர்களால் எழுதப்பெற்ற  'கதிர்முருகுவின்இலக்கியப்பணிகள்" என்னும் நூல் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில்தமிழறிஞ்சர்களுக்கான நூல் வெளியீட்டு விழாவில் 06.06.2015 அன்று மதிப்புமிகு நிர்மலா (ஆட்சிப்பணி) அம்மையார் அவர்களால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



கதிர்முருகுவின் தமிழ்க்கொடைகள்:

1.அருள்நெறி மாணிக்கவாசகர் 
2.நாட்டுப்புற பண்பாடும் வழிபாடும்
3.பிற்கால நீதி இலக்கிய வரலாறு 
4.திறனாய்வு நோக்கில் நந்திக்கலம்பகம்
5.சங்கம் மருவிய கால அறநூல்கள்
6.எனக்குள் ஒரு முகம்
7.சங்க இலக்கியம் – அரும்பொருள்கள்
8.கபாடபுரம் - கட்டுரைத் தொகுப்பு (பதிப்பாசிரியர்)
9.தோ்ந்தெடுத்த சிறுகதைகள்
10.ஓங்கு பரிபாடல்
11.புறநானூற்றில் புறத்துரைகள் (பதிப்பாசிரியர்)
12.தொல்காப்பிய கட்டுரைகள் (பதிப்பாசிரியர்)

கதிமுருகுவின் உரைநூல்கள்;

1.அறநெறிச் சாரம்
2.நீதிநூல்
3.நீதிநெறி விளக்கம்
4.நன்னெறி
5.நீதிக்களஞ்சியம்
6.அறிவை வளர்ப்போம்
7.பத்துப்பாட்டு முழுமையும்.(பத்து நூல்கள்)
8.அறப்பளீசுரர் சதகம்
9.தண்டலையார் சதகம்
10.குமரேச சதகம்
11.கைலாசநாதர் சதகம்
12.சோழமண்டல சதகம்
13.அண்ணாமலை சதகம்
14.நந்திக் கலம்பகம்
15.மதுரைக் கலம்பகம்
16.திருக்காவலூர் கலம்பகம்
17.காசிக் கலம்பகம்
18.திருவரங்கக் கலம்பகம்
19.மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
20.திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
21.முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
22.தமிழ் விடு தூது
23.அழகர்கிள்ளைவிடுதூது
24.குலோத்துங்கன் சோழ உலா
25.இராசராசன் சோழன் உலா
26.விக்கிரம சோழன் உலா
27.அபிராமி அந்தாதி
28.சரசுவதி அந்தாதி
29.பொன்வன்னத்தந்தாதி
30.அற்புதத் திருவந்தாதி
31.சரபேந்திர பூபாலக்குறவஞ்சி
32.முக்கூடற்பள்ளு
33.தஞ்சைவானன் கோவை
34.பராபரக் கன்னி
35.முத்தொள்ளாயிரம்
36.சிலை எழுபது
37.ஏரெழுபது
38.ஈட்டியெழுபது
39.உதயணகுமார காவியம்
40.சூளாமணி
41.விவேக சிந்தாமணி
42.புறப்பொருள் வெண்பாமாலை
43.திருவாசகம்
44.திருவெம்பாவை
45.காரைக்கால் அம்மையாரின் படைப்புகள்
46.திருப்பாவை
47.நாச்சியார் திருமொழி
48.சிறிய திருமடல்
49.பெரிய திருமடல்
50.இரட்சணிய மனோகரம்
51.நாலாயிரத் திவ்வியபிரபந்த உரை
52.நாககுமார காவியம் உரை

மற்றும் 30க்கும் மேற்பட்ட ஆய்வுரைகள்.



தொடர்புக்கு,
முனைவர்.கதிர்முருகு,
இயக்குநர்,
வேரல் மொழி இலக்கிய ஆய்வுமையம்.
சென்னை.
பேச:9600129742




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக